இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சுவார்த்தைகளை மீள தொடங்க வேண்டும்
இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என மூன்று நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் போர் நிறுத்தம் பற்றியும், பயண கைதிகளை விடுவிப்பது பற்றியும் இருதரப்புகளும் பேச வேண்டும் என்ற கோரிக்கை வெளியாகி உள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.