உமா ஒய நீர் மின் திட்டத்தின் முன்னேற்றங்களை பிரதமர்
தினேஷ் குணவர்தன பார்வையிட்டுள்ளார். உமா ஒய சுரங்க பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி இயந்திரத்தையும் பிரதமர் பார்வையிட்டுள்ளார். இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து இதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. செயற்திட்டத்திற்குப் பொறுப்பான ஈரான் நாட்டின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். தற்சமயம் இந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக ஆயிரத்து 500 ஹெட்டேயர் நிலப்பரப்புக்கான நீர் வழங்கப்படது. இந்த நீர்தேக்கத்திலிருந்து நான்காயிரத்தி 500 ஹெக்டேயர் வயல்களுக்கான நீரை வழங்குவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.