உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியிருக்கிறது
உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் தீர்ப்பின் மூலம் மக்களின் ஜனநாயக உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மக்களின் அடிப்படைகளைப் பாதுகாக்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.