உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஇ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பங்ளாதேஷ் மாணவர்கள் போராட்டம்.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பிரதமரின் இராஜினாமாவை தொடர்ந்து, அந்நாட்டு ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து, 84 வயது முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.