ஊழல் குற்றச்சாட்டின் கீழ்இ சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சருக்க சிறை.
சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியம் ஈஸ்வரன் தாம் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் மூன்று லட்சத்து 11 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை பரிசாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரின் கடந்த 50 வருட வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முதலாவது அமைச்சராக இவர் கருதப்படுகின்றார்.
இம்மாதம் 7ஆம் திகதி முதல் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றும் நாடு என்ற வகையில் இந்த சம்பவம் சிங்கப்பூரின் அரசியலில் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.