எசல பெரஹரா: உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும்
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை தெற்காசியாவின் மிகச்சிறந்த சமய நிகழ்வாக உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ய பூரண அரச அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எசல பெரஹராவை வெற்றிகரமான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். எசல பெரஹரா தேசிய நிகழ்வாக மாத்திரம் இன்றி இலங்கையின் கலாசாரத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிபலிக்கும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இதனைப் பாதுகாத்து, முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும் என்று ஜனாதிபதி கூறினார். கண்டி எசல பெரஹரா வெற்றிகரமான முறையில் முடிவடைந்த செய்தியை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேயலவிடம் இருந்து பெற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி இது பற்றிக் கருத்து வெளியிட்டார்.