எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது – மத்திய வங்கி
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைவதற்கு வருட இறுதிக்குள் முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4 தசம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஐந்து தசம் 3 ஆக அது காணப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாட்டின் பொரளாதாரம் 3 தசம் பூச்சியமாக காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்சமயம் நான்கு சதவீதமாக அது காணப்படும் நிலையில் எதிர்காலத்தில் மிகவும் சிறந்த வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் ஆளுனர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.