Home » எயார்பஸ் விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை

எயார்பஸ் விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை

Source

இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னதாக, இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பானதாகக் கூறப்படும் இலஞ்ச விவகாரம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு (CIABOC) உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதராகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணையின்போது, CIABOC தனது விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், விசாரணையைத் தொடர்வதற்காக மேலும் ஒரு தவணை கோரியது.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான இலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இரண்டாவது சந்தேகநபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான இலங்கை விமான சேவையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷவின் மகனுமான ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கும் முன்னதாக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான், வழக்கின் அடுத்த விசாரணையை ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு CIABOC-க்கு உத்தரவிட்டார்.

The post எயார்பஸ் விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both