எரிசக்தி கொள்கை தொடர்பில் விவாதத்தில் கலந்து கொள்ள தாயர் – அனுரகுமார
அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை தொடர்பில் எந்த நேரத்திலும் ஒரு எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேரகவின் விவாதத்தில் கலந்து கொள்ள தாம் தாயர் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, சமகி ஜனபலவேகய கட்சியின் பிரதிநிதிகளும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனை தாம் ஒரு சவாலாக விடுப்பதாக திருஅனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அண்மையில் தாம் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஒரு விவாதத்திற்கு வருகை தருமாறு சவால் விடுத்திருந்தார்.
அந்த சவாலையும் தாம் ஏற்றுக்கொள்வதாக தேசிய சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுகுமார திசாநாயக்க தெரிவித்தார். தற்சமயம் எரிபொருள் விலையிலுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் அதன் விலையை குறைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதனை ஏதேச்சையாக எந்தவித சூத்திரமும் இல்லாமல் மேற்கொள்ள முடியாது என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.