எல்பிற்றிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி.
எல்பிற்றிய பிரதேச சபைத் தேர்தல் அடுத்த மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு பொறுப்பேற்கும் நடவடிக்கை நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
அங்கீகரிக்கப்பட்ட எட்டு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யு.எச்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.
48 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெறும். எல்பிற்றிய பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 55 ஆயிரத்து 643 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.