எல்லையை மூடுவதற்கு வடகொரியா தீர்மானம்
தென்கொரியாவுடனான எல்லைப்பகுதியை மூடுவதற்கு வடகொரியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, வடகொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கான ரெயில் போக்குவரத்துத் துண்டிக்கப்படும். அத்துடன் எல்லையில் தடுப்புக்களை அமைத்து, இராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
கடந்த சில வாரங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்த நிலையிலேயே தற்போது எல்லைப் பகுதியை மூடுவதற்கு வடகொரியா தீர்மானித்துள்ளது.