எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் 65வது சிரார்த்த தினம் இன்று.
இலங்கையின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 65 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.
இலங்கையின் 4ஆவது பிரதமரான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க துப்பாக்கிச் சூட்டொன்றில் கொல்லப்பட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய முன்னோடி எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவாகும். இலங்கைக்கு சர்வஜென வாக்குரிமை கிடைக்கப்பெற்றதை அடுத்து இயங்கிய அரச மந்திரி சபைக்கு தெரிவான அவர், சுகாதாரம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக செயற்பட்டார்.
சிங்கள மொழியை அரச மொழியாக்கியமை, ஊழியர் சேமலாப நிதியத்தை ஏற்படுத்தியமை, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டமை உள்ளிட்ட பல பாரிய நடவடிக்கைகளை அவரது காலத்தில் முன்னெடுத்தார்.
அன்னாரது 65வது சிரார்த்;; தின நிகழ்வுகள், இன்று காலை அத்தனகல்ல ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்கு அருகில் நடைபெறவுள்ளது.