ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான பேச்சுக்களை தொடர முடியாத நிலை
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் அதனை பாதித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
அதற்காக அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள ஆகியோர் அடங்கிய குழுவொன்றும் பெயரிடப்பட்டது.
இந்த குழு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுமார் 8 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அங்கு முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய விடயங்கள் காரணமாக பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முன்மொழிவுகளாக, அடுத்த தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியில் இருக்கக்கூடாது என்பவை காணப்படுகிறன.
எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் அவரது தனிப்பட்ட வாக்குகளாகவே கருதப்படுகின்றன.
எனவே, ரணில்; இல்லாத அரசியல் கூட்டணிக்கு உடன்பட முடியாது என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.