ஐக்கிய முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று கூடியபோது, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டிணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் ஐக்கிய முன்னணி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
யதாமினி குணவர்த்தன தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.