இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 5 நாடுகளுக்கு ஐந்து முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தக நாம தூதுவர்களை நியமிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை இராஜாங்க அமைச்சரினால் கையளிக்கப்பட்டதுடன், இந்தியாவுக்காக சிவ சுப்பிரமணியம், மலேசியாவிற்கு மெஹமட் ஹில்மி கரீம், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தக்சிலா பிரேமசிறி, தென் கொரியாவுக்கான வர்த்தக தூதுவராக சஞ்சீவ சுரவீர மற்றும் பிரித்தானியாவுக்காக கன்னையா கஜன் ஆகியோர் வர்த்தக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இந்த வர்த்தக நாம தூதுவர்கள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும், அந்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த வர்த்தக நாம தூதுவர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அந்த நாடுகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பெறுவதுடன் அவர்கள் நேரடியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
N.S