ஐரோப்பாவில் அகதிகள் பிரச்சினைக்கு உக்ரேன் முகம்கொடுத்துள்ளது.
ரஷ்ய – உக்ரேன் மோதல் காரணமாக உக்ரேன் சனத்தொகையில் 20 சதவீதமானோர் நிர்;க்கத்தியாகியுள்ளனர். மேலும் 20 சதவீதமானோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இது இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் அதிகளவான குடிபெயர்ந்தோர் பிரச்சினையாகும். இந்தக் காலப்பகுதியில் பொருளாதாரம் 7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பாவின் இந்த நிலை காரணமாக உலகளாவிய பொருளாதாரமும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
முன்னாள் நேட்டோ பொதுச் செயலாளர் ஜேன்ஸ் ஸ்ரொல்டென்பேர்க் (Jens Stoltenberg ) கருத்து வெளியிடுகையில் யுத்தம் இடம்பெறும் வரையில் உக்ரேனுக்கு நேட்டோவுக்குள் உள்நுழைவதற்கு இடமில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.