ஐ.ம. கூ. வேட்புமனுக்கள் எதிர்வரும் 10ஆம்இ 11ஆம் திகதிகளில்..
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் பிரசார கூட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுத் தேர்தலுக்கான கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த அத்தநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்காக தமது கட்சியுடன் இணைந்துள்ள கட்சிகளுடன் முன்னோக்கிச் செல்லத் தயார் எனவும் தெரிவித்தார்.
பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தலைவருடன் முன்னோக்கிச் செல்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குழுவொன்றும் தமது கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தார்.
ஆனால், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் இரண்டையும் நடத்த வேண்டியதன் அவசியத்தை திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.