ஐ.ம. சக்தியின் வேட்புமனுவில் புதியவர்களுக்கு சந்தர்ப்பம்
ஐக்கிய மக்கள் சக்தி 22 தேர்தல்கள் மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களை தயார்படுத்தியிருப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சகல மாவட்டங்களுக்கும் புதியவர்களை களமிறக்கியிருப்பதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
தொழில்வாண்மை மிக்கவர்கள் இளைஞர், பெண்கள் உட்பட சகல தரப்பினரும் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.