ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிலிப்பின்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரருக்கு பிரச்சனை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமது தாய்நாட்டுக்கு இரட்டை தங்க பதக்கத்தை வென்ற பிலிப்பின்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் கார்லோஸ் யூலோவுக்கும் அவரது தாயிற்கும் இடையிலான பிரச்சனை பிலிப்பின்சில் பெரும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது தங்க பதக்கத்தை வென்றதைத் தொடர்ந்து பிலிப்பின்ஸ் தலைநகரம் விழா கோலம் பூண்டிருந்ததோடு, யூலோவை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அன்றையதினத்தன்று யூலோவின் தாய் வானொலி நிலையம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது மகனை மிகத் தீவிரமாக விமர்சித்திருந்ததுடன், மகனின் காதலியை தாம் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
கார்லோஸ் யூலோவின் காதலி, தமது எதிர்கால மாமியாரின் குற்றச்சாட்டுகளுக்கு டிக்ரொக் சமூக வலைத்தளத்தின் ஊடாக பதிலளித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனை பிலிப்பின்ஸ் ஊடகங்களில் அதிகளவு பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.