கடற்படை ஆற்றலை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை வடகொரிய தலைவர் துரிதப்படுத்தியுள்ளார்.
தமது நாட்டின் கடற்படை ஆற்றலை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை வடகொரிய தலைவர் கிம் யொங் உன் துரிதப்படுத்தியுள்ளார்.
இன்று அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடற்படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் பொழுது, சமகாலத்தில் கடற்படையின் அவசியம் குறித்து திரு.கிம் யொங் உன் வலியுறுத்தினார்.
தமது நாடு வெகுவிரைவில் யுத்த கப்பல்களையும் பாரிய நீர்மூழ்க்கி கப்பல்களையும் பெற்றுக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.