கடல் மட்டம் உயர்வது பற்றி ஐநா செயலாளர் நாயகம் எச்சரிக்கை
கடல் மட்டம் உயர்வது பற்றி ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குத்தரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அதிகரிப்பானது எமது கற்பனையை; தாண்டிய விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையும், உலக வளிமண்டலவியல் ஸ்தாபனமும் இணைந்து கடல் மட்ட அதிகரிப்பு பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்ட சமயத்தில் குத்தரெஸ் அவர்களின் கருத்து வெளியாகிறது.
1990 இற்கும், 2000இற்கும் இடைப்பட்ட காலத்தில் ரொங்கா என்ற நாட்டில் கடல் மட்டம் 21 சென்ரிமீற்றரால் உயர்ந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.