Home » கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்

கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்

Source

இஸ்ரேல் அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு நிர்மாணத்துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய போக்குகளால், பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கட்டுமான துறையில் நல்ல அனுபவமும் திறமையும் கொண்ட 25 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.ளடடிகந.டம இற்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்யமுடியும்.

இந்த ஆட்சேர்ப்புக்கு பணியகத்தால் எந்த நிறுவனமும் அல்லது தனிநபரும் அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம் என பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணம் கோரும் நபர்கள் குறித்த தகவல்களை 011 2 86 42 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image