கம்-உதாவ வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க தயார்.
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவான கம்-உதாவ வீடமைப்புத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, சகல குடும்பங்களுக்கும் வீட்டுரிமை வழங்கப்படுமென ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல நகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்டத்தின் 30 பிரதேச செயலாளர் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படும். இளம் தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயம், மீன்பிடி மற்றும் முச்சக்கர வண்டி மற்றும் பஸ்களுக்காக ஞசு முறையின் கீழ் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும். அனைத்து வறிய குடும்பங்களுக்கும் இரண்டு வருடங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுமெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.