கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு
இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை, வெற்றிகரமாக நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள இரண்டாயிரத்து 200 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை பரீட்சை ஆரம்பமானது. பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுவதற்கு அனைவரினதும் ஆதரவு மிகவும் அவசியமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இம்முறை பரீட்சைக்கான கட்டுரை வினாத்தாளுக்கு கூடுதலாக பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயிரத்து 617 சிசுசெரிய பஸ்கள் பரீட்சை நாட்களில் சேவையில் ஈடுபடுகின்றன. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இன்று முதல் 16 புதிய ரயில் சேவை நேரங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில் சேவை துணை போக்குவரத்து கண்காணிப்பாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்துள்ளார்.
ஆயிரத்து 625 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் மின்சார தடை அமுல்படுத்தப்படும். ழூழூழூ