களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் குறைவடைகிறது.
களு, கிங், நில்வலா கங்கைகளின் நீர் மட்டம் துரிதமாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் கணிசமான அளவு மழை பெய்யாதமை இதற்கான காரணமாகும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார்.