காசாவில் போலியோ நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
காசாவில் போலியோ நோய் தொற்றுக்கான குழந்தையொன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கின்றது.
காசாவில் கடந்த 25 வருட வரலாற்றில் போலியோ தொற்றுக்கு உள்ளான நோயாளியாக ஆறு மாதங்களைக் கொண்ட பெண் குழந்தை அடையாளம் காணப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
கடந்த 11 மாதங்களாக காசாவில் இடம்பெறும் யுத்தத்தினால் போலியோ தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்புக் கிடைக்காமை இதற்கான காரணமாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
காசாவின் மீது கடந்த 11 மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால் தற்சமயம் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.