Home » காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

Source

காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள இடம் உட்பட தங்குமிடங்கள் மற்றும் பாடசாலைகள் மீதான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் – இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்; தீவிரமடைந்து வருகிறது.

இந்த மோதலினால், தமது இராணுவத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், இஸ்ரேலிய முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய அறிவித்துள்ளது.
காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல்-காசா மோதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,000ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image