காடாக மாறியுள்ள காணிகள் மீள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும்
இழந்த அபிவிருத்தியின் பலன்களை வடக்கு, கிழக்கு மக்களுக்கு தமது ஆட்சியில் பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத்; தெரிவித்தார்.
இந்தநிலையில், தன்னுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இதேவேளை, பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணிகள் தற்போது காடாகிவிட்டதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அந்த காணிகளை மீள் விவசாயம் செய்யவும், யானை – மனித முரண்பாடு தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
50 கிலோ எடை கொண்ட உர மூட்டை ஐயாயிரம் ரூபா விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்த சஜித் பிரேமதாச, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.