காலஞ்சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 24வது சிரார்த்த தினம் இன்று.
உலகின் முதல் பெண் பிரதமரான காலஞ்;சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 24வது சிரார்த்த தினம் இன்றாகும்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலிருந்து திரும்பும் போது மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
1959ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் திடீர் மரணத்திற்குப் பின்னர், திருமதி பண்டாரநாயக்கா 1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி உலகின் முதல் பெண் பிரதமராகவும் இலங்கையின் பிரதமராகவும் பதவியேற்றார்.
1961ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுநலவாய பிரதமர்கள் மாநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் இவரையே சாரும். அவர் 1970 முதல் 1977 வரையிலும் 1994 முதல் 2000இல் இறக்கும் வரையிலும் பிரதமராக பணியாற்றினார்.
1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கையை சோசலிசக் குடியரசாக மாற்றுவதற்கு திருமதி பண்டாரநாயக்கா செயற்பட்டார்.
சிறிமா – ஷாஸ்;திரி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் இருந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய பிரஜைகளை திருப்பி அனுப்புவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.