காஸாவில் போலியோ மருந்து வழங்கும் வேலைத்திட்டம்.
காஸா எல்லைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. மத்திய காஸா எல்லைப் பகுதியில் தடுப்பூசி திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை செயற்படுத்தப்படும்.
இந்நிலையில், வடக்கு காஸாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அங்கு தடுப்பூசி செலுத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் கட்டமாக போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், காஸாவில் இருந்து போலியோ நோய் ஒழிக்கப்பட்டது. ஆனால், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாக காஸா பகுதியில் மீண்டும் போலியோ நோய் பரவ ஆரம்பித்துள்ளது.