காஸா எல்லைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல்.
வடக்கு காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 21 பெண்களும் அடங்குவர். தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வா கொல்லப்பட்டதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இக்கொலை மூலம் தமது அமைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்றுவரும் லெபனானில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், காஸா பகுதியில் அவ்வாறான நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.