Home » கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் அமுல்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் அமுல்

Source

நாளை தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

போரா ஆன்மீக மாநாடு நாளை தொடக்கம் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் நாட்டுக்கு வரவுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவிற்குள் நுழையும் பல வீதிகள் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மூடப்படவுள்ளது.

அதன்படி, குறித்த வீதிகள் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையும், பிற்பகல் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையும் மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image