கொழும்பு சர்வதேச புத்தக கண்காடசி நாளை ஆரம்பம்
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை கண்காட்சி இடம்பெறும்.
குறித்த தினங்களில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை காட்சிக் கூடங்கள் திறந்திருக்கும். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் இந்தக் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
400இற்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. விசேட விலைக்கழிவில் புத்தகங்களை கொள்வனவு செய்ய முடியும்.
இந்தக் கண்காட்சியில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள், கல்வியியல் கல்லூரிகள் உட்பட சகல கல்லூரிகளுக்கும் தேவையான புத்தகங்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.