Home » கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவைகள் இரத்து.

கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவைகள் இரத்து.

Source

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்ஓயாவுக்கும், ஹிங்குரக்கொடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிபொருள் தாங்கி ரயில் ஒன்று காட்டு யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அத்துடன், ரயிலின் எஞ்சின் உட்பட நான்கு பெட்டிகள் சேதமடைந்துள்ளன.

ரயிலில் மோதுண்ட மற்றுமொரு காட்டு யானை தப்பிச் சென்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் கொலன்னாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மின்னேரிய எரிபொருள் போக்குவரத்து ரயில் 146ஆவது மைல் கம்பத்திற்கு அருகில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image