சட்டத்தின் முன் அனைவரும் சமம் – அனுரகுமார தெரிவிப்பு
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டை தாம் வலியுறுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகள் மற்றும் ஆட்சியாளர்களின் நோக்கங்கள் ஆகியன ஒன்றுக்கொன்று சமமாகும் வகையில் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சட்டவாட்சியை நிலைநிறுத்தும் அரசாங்கம் ஒன்றை தாம் அமைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். சட்டவாட்சியை புறக்கணித்ததனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது.
அதேபோன்று சமூகங்களுக்கு இடையில் பல பிரச்சனைகள் எழுந்தன. நாட்டின் எரிசக்தி பிரச்சனையை தீர்க்கும் பொழுது அரசியல் ரீதியாக சிந்திக்காது நாட்டின் எதிர்காலம் குறித்து நேர்மையாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நீதித்துறை சார் பிரிவினர் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினரை சந்தித்து உரையாடும் பொழுதே அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.