சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி, நாட்டின் பொருளாதாரம் சரியான திசையில் நகர்த்துவதற்கான உத்தரவாதம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டல்.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறும் கடன் உதவி, நிதி மதிப்பிற்கு அப்பாற்பட்ட, முக்கியமான உத்தரவாதமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரியான பாதையில் செல்வது இதன் உறுதியாகும். அதன்படி, சர்வதேச நிதிச் சந்தைக்கு செல்ல முடியும் என தேசிய வானொலியின் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் தெரிவித்தார். அந்த உத்தரவாதம் கிடைக்காவிட்டால், நாடு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.