சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை
சவூதி அரேபியாவும், ஈரானும் உத்தியோகபூர்வமான முறையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடு, சீனாவின் தலைநகர் பேஜிங் நகரில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைஸால் பின் ஃபர்ஹான், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபிய அரசாங்கம் 2016ஆம் ஆண்டில் ஈரானுடனான உறவுகளை துண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.