சிறந்த வெளிநாட்டு கொள்கையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான சிறந்த வெளிவிவகார சேவை நாட்டுக்கு அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சேவைக்காக செல்லும் 11 உயர்ஸ்தானிகர்களையும் தூதுவர்களையும் உரிய நாடுகளுக்கு அனுப்ப முன்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். சிறந்த வெளிவிவகார கொள்கையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.