சிறுபோக நெல் கொள்வனவிற்கு 100 கோடி ரூபாய் நிதி.
சிறுபோக நெல் கொள்வனவிற்காக 100 கோடி ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 50 கோடி ரூபா நாளை விவசாய அமைச்சுக்கு கிடைக்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.
நிதி கிடைத்தவுடன், நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 32 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டு, நெல் கொள்வனவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேவைப்பட்டால், நாடளாவிய ரீதியில் அதிகபட்சமாக 250 களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என இத்தமல்கொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.