சீன ஜாதிபதி சீ ஜிங் பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடீன் ஆகியோர் இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளாhகள். சீன ஜனாதிபதியின் ரஷய விஜயத்திற்கு அமைவாக பேச்சுவர்த்தை இடம்பெறுகிறது. தொழில்நுட்பம், வர்த்தகம், சார்ந்த உதவிகளை ரஷ்யாவிற்கு வழங்குவது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்குத் தேவையான ராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷ்டா உக்ரேனுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உக்ரேனுக்கான ஜப்பானின் ஆதரவை வெளிப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.