சுற்றுலா பயணிகளின் வருகை 50 இலட்சம்வரை அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என, திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்திய அரசின் உதவியுடன் துறைமுகம் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு தேசிய பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்றும் ஜனாதபதி உறுதியளித்தார்
நிலாவெளியில் இருந்து திருகோணமலை வரையிலும் வெருகலாறு முதல் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்கள் உருவாக்கப்படும்.
திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இளைஞர் சமுதாயத்திற்காக நாடு முன்னேற்ற வேண்டும். அத்துடன் ஏற்றுமதி பொருளாதாரம் பலப்படுத்தப்படுவது அவசியமாகும்.
இதற்காக விசாயத்துறை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாக வேண்டும். நெற்செய்கை மூலம் ஒரு ஏக்கருக்கு எட்டு மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைப்பதற்கு ஏதுவாக அனைத்து உதவிகளும் வழங்கப்படல் வேண்டும்.
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 50 இலட்சம்வரை அதிகரிக்கப்படல் வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.