ஜனாதிபதித் தேர்தலில், சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை தெரிவிக்கப் போவதாக சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மத்திய அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் செய்தி ஒன்று வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைப்பதற்கான காரணமும் அதுவே ஆகும். அதன் ஊடாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்த முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் மத்திய அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.