ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுர குமார திசாநாயக்காவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைத் திட்டத்துடனான வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வது தமது கட்சியின் நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
தெளிவான அரசியல் தலைவரை நாட்டின் தலைமைத்துவத்திற்கு நியமிக்க மக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுர குமார திசாநாயக்காவிற்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்ததைக் கூறினார்.