ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாகும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாகும் வேட்பாளர்களுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாகும் சகல வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.