ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏனைய கட்சிகளும் வரவேற்கின்றன நாமல் கருணாரட்ன
சமகால ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலிருந்து மாத்திரமன்றி, ஏனைய தரப்புக்களினதும் பாராட்டுக்கள் கிடைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரும், விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளருமான நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற நாள் தொடக்கம் இதுவரையில் ஊழல், மோசடிகள், போதைப் பொருள் விற்பனை, பாதாள உலக செயற்பாடுகள் போன்றவை பெருமளவில் குறைந்திருக்கின்றன. இது மாபெரும் வெற்றியாகும் என திரு கருணாரட்ன குறிப்பிட்டார்.
இந்தக் காலப்பகுதியில் மக்கள் நலன்கருதி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் முதற்பணியாக அமையவிருப்பது அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதாகும்.
இதன் ஊடாக, விவசாயிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இன்றளவில் ஒரு ஹெக்டெயருக்கு 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் உர நிவாரணம் வழங்கப்படுகின்றது. படிப்படியாக பசளைகள், பீடை நாசினிகள் போன்றவற்றின் விலைகளை குறைப்பது அரசாங்கத்தின் நோக்கம் என விவசாய சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் விவசாய உபகரண கையிருப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.