ஜனாதிபதி புலமைப்பரிசிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. கல்வியமைச்சும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கல்வி அமைச்சின் சார்பில் திலக்கா ஜெயசுந்தரவும், இலங்கை காப்புறுதுpக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் அதன் பிரதம வழிநடத்தல் அதிகாரி பிரியந்த பெரேராவும்; உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
கல்வியமைச்சு 7 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான நிதியினை செலவிட்டு, இந்த மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உரையாற்றினார். சுரக்ஷா மாணவர் காப்புறுதியினை இன்று முதல் 3 வருடங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவுளள்தாக அவர் குறிப்பிட்டார்.