ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினால் அது நிறைவேற்றப்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏதேனும் ஒரு வாக்குறுதியை வழங்கினால் அந்த வாக்குறுதியை அவர் நூற்றுக்குநூறு வீதமும்; முழுமையாக நிறைவேற்றக்கூடியவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலி நகரில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் அண்டு நாட்டில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது எவரும் நாட்டை பொறுப்பேற்காத சந்தர்பத்தில் நாட்டை பொறுப்பேற்று தாம் வழங்கிய உறுதிமொழியின்படி இந்த நாட்டை மீளவும் கட்டியெழுப்பிய பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உரித்தாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார ரீதியாக மட்டுமன்றி சர்வதேச சமூகத்தின் நம்பிகையை வென்றெடுத்தவராகவும் திகழ்கிறார். ஒரு குலத்திற்கோ கலாசாரத்திற்கோ தலைவராக இல்லாமல் முழு நாட்டின் தேவை கருதி, நாட்டுக்கே தலைமை தாங்கக் கூடிய ஆளுமையை இக்காட்டான காலகட்டத்தல் வெளிப்படுத்தினார் என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.