ஜப்பானின் டோஹோஹூ பிராந்தியத்தில் சொத்துக்களுக்கு சேதம்
ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியமான டோஹோஹூ பிராந்தியத்தில் அடைமழையும் பலத்த காற்றும் வீசியதால் அங்கு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
நாளையதினம் இந்த சீரற்ற காலநிலை மேலும் தீவிரம் அடையும் என்று ஜப்பானின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக ஓகஸ்ட் மாதத்தில் ஏற்படக் கூடிய மழைவீழ்ச்சியை விட கூடுதலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வெள்ள அனர்த்தமும் ஏற்படலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. ஏற்கனவே பலத்த காற்று வீசவதால் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.