டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 40 ஆயிரத்து 800க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி. இரத்தினபுரி, மாத்தறை, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலைக்கு பின்னர், டெங்கு நோயாளர்கள் மேலும் அதிகரிக்கலாம்.
நுளம்பு பெருகும் இடங்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வீடு, பாடசாலை, நிறுவன வளாகங்களில் இதற்கான ஒழுங்குமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
காய்ச்சல் ஏற்பட்டால், முறையான சுகாதார ஆலோசனையை கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா வீரசிங்க மக்களை கேட்டுள்ளார்.