தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது.
தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார்கள். இதில் 79 ஆயிரத்து 787 பரீட்சார்த்திகள் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாகவும் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு மிகவும் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. நாடளாவிய ரீதியில் 491 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை, பரீட்சை
மண்டபங்களுக்கு அருகில் இன்று தொடக்கம் பரீட்சை முடிவடையும் வரை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுற்படுத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.
பரீட்சை நிலையங்களுக்கு அருகில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.